Sunday, November 27, 2011

போராளியின் மனைவி



தைரியாமாக இருப்பதெற்க்கென்றே
நிர்பந்திக்கப்பட்டவள்

அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு
அடிக்கடி போய்வர வேண்டியிருக்கும்

கணவனின் நண்பர்கள்
அடிக்கடி பேசும்மளவு
பரிச்சயமிருக்கவேண்டும்

மென்னையானவளாயிருத்தல்
அவ்வளவு உகந்ததல்ல
வன்முறைக்கும் கொஞ்சம்
பழகிக்கொள்ள வேண்டும்

ஒருவேளை காதல்மணம்
புரிந்திருப்பாளாயின்
தற்போது ஏற்படும்
குற்றவுணர்ச்சிக்கும்
சுய இரக்கத்திற்கும்
பதில்தேடி அவ்வப்போது
கோவிலுக்கோ
தத்துவ புத்தகங்களிடமோ
மனநல மருத்துவரிடமோ
செல்ல வேண்டியிருக்கும்

போராளிகள்
தம் மனைவியின் மனதை
புரிந்துகொள்ளவோ
பொருட்படுத்தவோ கூடாது

அதையும் மீறி
அவளின் கண்ணீருக்கு
செவிமடுத்தால்
அவன் திரும்பி வரமுடியா
முழுமையான குடும்பஸ்தனாகிவிடும்
சமுஅபாயம் இருக்கிறது

போராளியாய் இருப்பது
போராளிகளுக்கு எப்போதும்
எளிதாகவே இருக்கிறது

போராளியின் மனைவியாய் இருப்பது
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை
சமூகப் பார்வை அதிகமுள்ள பெண்ணுக்குக்கூட

5 comments:

thenmozhi said...

கவிதை அருமையா இருக்கு சபரி..இன்னும் எதிர்பார்க்கிறோம்..

Jayaprakashvel said...

கொஞ்சம் நீளம் அதிகம். அதனால் காரம் கம்மி. போட்டோ நல்ல குறியீடு. நல்ல நட்பு. வாழ்த்துக்கள்.

sabarinathan subbaramanian said...

@jayaprakashvel: இதை காரசாரமா எழுத முடியுமான்னு தெரியல...
நல்ல நட்பு...

kubandiran said...

anna super .................

Jayaprakashvel said...

What I feel is its looks like too lengthy for me. So looks much diluted. My opinion.