Sunday, August 7, 2011

அர்த்தமற்ற கேள்வி…


தன் சொந்தவாழ்வில்
உறவுகளின் அதீத குறுக்கீடுகளின்
அதிர்ச்சியில் உறைந்தபிறகு…

அம்மாவுடனான தொலைபேசி
உறையாடல்கள் சம்பிரதாயங்களுக்குமேல்
நீளமுடியாமல் போனபிறகு…

அவள் பிரியங்களை
முழுமையாய் மறுத்தபிறகு…

அன்பின்மீதும்
கடவுளின்மீதுமான
நம்பிக்கைகள் உடைந்தபிறகு…

எதேட்சையாக நண்பர்களிடமிருந்து
எந்த தொலைபேசி அழைப்பும் வராத
அந்த ஞாயிற்றுக் கிழமைக்குப்பிறகு…

முடிவேயில்லாத விடுதி வாழ்க்கையின்
தனிமையில் தவறாமல் வந்துவிடுகிறது...

இந்த வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் உள்ளதா
என்ற அர்த்தமற்ற கேள்வி…

2 comments:

Pradeep Kumar said...

மிக அருமை...

Jayaprakashvel said...

வானம் படத்தில் கேபிள் ராஜா சொல்வார் என்னா வாழ்க்கடா இது? அது மாதிரி இருக்கு. இது எல்லோருக்கும் எதோ ஒரு தருணத்தில் நிகழக் கூடியது