Monday, July 5, 2010

மன்னித்து விடலாம்


சவம் கிடத்தியிருக்கும் வீட்டில்
கூச்சலிட்டு விளையாடும் குழந்தைகளை…

எவ்வளவோமுறை சொல்லியும்
ரகசியங்களை உலறிவிடும் மனைவியை…

திடீர் வெற்றிடத்தை உருவாக்கி
தனிமையை உணரவைத்த
சமீபத்தில் காதலில் விழுந்த நண்பனை…

இன்னும் சிறுபிள்ளையாய் எண்ணி
அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கும் அப்பாவை…

அன்பை ஏற்க மறுத்து
பிரிந்து சென்ற காதலியை…

என் சாவிற்கு எங்கிருந்தாலும் வந்துவிடவேண்டும்
என்று பயமுறுத்தும் அம்மாவை…

என எல்லோரையும்
மன்னித்து விடலாம்…

பாவம் அவர்கள்
தான் இன்ன தவறு செய்கிறோம் என்று
அறியாமல் செய்கிறார்கள்…

5 comments:

நளினி சங்கர் said...

சபரி சமீபத்தில் நான் படிக்க நேர்ந்த கவிதைகளில் மிகவும் அற்புதமான ஒன்று ‘மன்னித்து விடலாம்’. ஒவ்வொரு மன்னிப்பையும் படிக்கும் போது அட, சூப்பர், அய்யயோ, என என் புருவங்கள் உயர்ந்து கொண்டே சென்றது. மிகவும் பொறாமையாக இருக்கின்றது. இன்னும் கலக்க வாழ்த்துக்கள்.

கவிதா பேச்சி said...

சவம் கிடத்தியிருக்கும் வீட்டில்
கூச்சலிட்டு விளையாடும் குழந்தைகளை…(S.raa va thotutinga ponga)...Nalla irukku kavithai

Jayaprakashvel said...

சபரி
உங்கள் கவிதையில் திருத்தம் சொல்லவில்லை. ஆனாலும் என் மனதில் பட்டதை சொல்ல விரும்புகிறேன். கடைசி மூன்று வரிகள் கவிதையின் முன்னைய வரிகளின் நேர்த்தியை மிகவும் குறைத்து விடுவதாகத் தோன்றுகிறது. அந்த கடைசி மூன்று வரிகள் மிகவும் சம்பிரதாயமானவை. அவை இந்தக் கவிதையை முடித்து வைத்து விடுகின்றன

Jayaprakashvel said...

சம்பந்தம் இல்லை என்றாலும் எனது பழைய ஸ்டேட்மெண்ட் ஒன்று நினைவுக்கு வருகிறது.

சாவு வீடானாலும்
குழந்தைகள் சிரிக்கும்;
பிணத்தின் மேலானாலும்
பூக்கள் மணக்கும்.

S. Philip Raja said...

sabari anna, kavithai romba nallaa irukku. puruvangal uyarththa vaitha varigal kavithai muzhudhum. nichchayamaga avargalai mannippom.