Saturday, June 19, 2010

வாழும் கலை


பொது இடங்களில் யாரரேனும்
குழந்தைகளை அடிக்கும்போது
முகத்தை திருப்பிக் கொள்ளுங்கள்
பார்க்காததுபோல்…

வயதான முதாட்டி பிச்சை கேட்டால்
கையில் அகப்படும் சில்லரை நாணயத்தை தந்துவிட்டு
அங்கிருந்து வேகமாக
சென்றுவிடுங்கள்…

வேறு வழியேயில்லாமல்
கடைசியாய் லஞ்சம்
கொடுத்ததுபற்றி
யாரிடமும் சொல்லிக்கொள்ள வேண்டாம்…

விபத்துக்கள்
கற்பழிப்பு
அரசியல்
செய்திகளை தவிர்த்துவிடுங்கள்
வாசிப்பிலிருந்து…

முடிந்தவரை தப்பிச் செல்லுங்கள்
கையருநிலையில் வாழ்தலின்
குற்றவுணர்விலிருந்து…

3 comments:

கவிதா பேச்சி said...

Nalla kavithai...
"வாழும் கலை" - Naan paartha kavithahalile mihavum poruthamana thalaippai konda kavithai ithu...Thalaippe kavithai pola irukkinrathu...Ennai kutra unarchikku ullakkuhirathu intha kavithai....super sabari

நளினி சங்கர் said...

எதையும் விட்டுவைக்கல...


அற்புதமான வரிகள் சபரி...


குறிப்பாக 'வாழும் கலை' என்கிற தலைப்பு

Jayaprakashvel said...

இது ரொம்ப நல்ல கவிதை சபரி